இந்தியாவின் ஊடாக இலங்கைக்குக் கடத்த முயன்றாகக் கருதப்படும் – பல கோடி ரூபா பெறுமதியான – 11 கிலோ ஐஸ் போதைப்பொருள் சென்னையில் கைப்பற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானியரின் ஏற்பாட்டில் இந்தியாவின் ஊடாக இலங்கைக்கு கடத்த முயன்றபோதே இவைகைப்பற்றப்பட்டன என இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை கடத்த முயன்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆறுபேரில் மூவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனத்தெரிவிக்கப்படுவதோடு இலங்கைச் சேர்ந்த மூவருமே முஸ்லிம்கள் எனவும் இந்தியத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கடத்தல் போதைப்பொருள் இந்திய மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டமையுடன், இதில் பாகிஸ்தான் நாட்டவர்களிற்கும் தொடர்பு இருப்பதனால் இந்தியாவில் அதி தீவிர விசாரணைக்கு இவ்விடயம் உட்படுத்தப்பட்டுள்ளது.