உக்ரைனின் தற்பாதுகாப்பிற்காக குறுகிய தூர ஏவுகணைகளை வழங்குவதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் அறிவித்துள்ளார். ரஷ்யா தனது நாட்டு எல்லையில் சுமார் 100,000 படையினரை நிலைநிறுத்தியதை அடுத்து, இவ்வாறு ஆயுதங்களை வழங்குவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
அத்துடன், தமது நாட்டின் ஒரு சிறிய படை குழுவினரையும் உக்ரைனுக்கு அனுப்பவுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைனின் கடற்படையை வலுப்படுத்த ஆதரவு தெரிவிப்பதாக பிரித்தானியா அறிவித்திருந்ததை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டிலிருந்து உக்ரைனில் பிரித்தானிய படைகள் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.