சிலியில் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களின் போது முக்கியத்துவம் பெற்ற இடதுசாரி சட்டமன்ற உறுப்பினர் கேப்ரியல் போரிக், நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 99 சதவீத வாக்குச் சாவடிகளில், கேப்ரியல் போரிக் 56 சதவீத வாக்குகளைப் பெற்றார். அவரது பழமைவாத எதிராளியான ஜோஸ் அன்டோனியோ காஸ்டுக்கு 44 சதவீத வாக்குகள் கிடைத்தன. 35 வயதில், போரிக் சிலியின் இளைய ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார். அவர் மார்ச் மாதம் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.