இலங்கை

பொதுபல சேனாவை தடைசெய்யக் கோரும் பரிந்துரை அரசினால் நிராகரிப்பு

இனவாத அமைப்பு என பொதுபல சேனாவை தடை செய்யக்கோரி ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. பொதுபல சேனாவை தடை செய்வதால்

Read More »

இலங்கையில் இனி ஒவ்வொரு ஞாயிறும் கறுப்பு போராட்டம்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரையும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படும் வரையும் கறுப்பு ஞாயிறு அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பேராயர் கர்தினால் மெல்க்கம் ரஞ்ஜித்

Read More »

கோவிட் சிகிச்சையின் பின் வீடு திரும்பியவர் மரணம்

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் உள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய வயோதிபப் பெண் மறுநாளான இன்று உயிரிழந்தார். அவரது

Read More »

இன்றும் 7 பேரின் உடல்கள் ஓட்டமாவடியில் அடக்கம்

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த மேலும் 7 பேரின் சடலங்கள் இன்று திங்கட்கிழமை அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இந்த தகவலை தெரிவித்தார். மட்டக்களப்பு – ஓட்டமாவடி

Read More »

தேர்தல் நடத்தப்படாது-பஸில் ராஜபக்ஷ

2021ஆண்டாகிய நடப்பு வருடத்தில் எந்த தேர்தலும் இடம்பெறாது என்று அரச உயர்மட்டத்திலிருந்து தகவல் வெளிவந்துள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தல் ஜுனில் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக மீண்டும் செய்திகள்

Read More »

மைத்திரி,ரணிலுக்கு எதிராக வழக்கு ஜுனில் விசாரணைக்கு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத்தவறியதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது.

Read More »

மகளிர் தினத்தில் யாழில் தீப்பந்தப் போராட்டம்

சர்வதேச மகளிர் தினமான இன்று, பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நீதி வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கட்டுள்ளது. இலங்கையை

Read More »

கோவிட் தடுப்பூசியினால் குழந்தை பேறு இழப்பா?

கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வதன் ஊடாக ஆண்மையிழப்பு அல்லது குழந்தை பேறு இழப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் என வெளியாகிவரும் தகவல்கள் குறித்து அரசாங்கம் பதிலளித்துள்ளது. கொழும்பு

Read More »

மகளிர் தினத்தில் உறவுகளை கோரி பெற்றோர் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017 மார்ச் மாதம் 8ஆம் திகதி ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று நான்காவது ஆண்டுகளை கடந்து இடம்பெற்று

Read More »

ஹட்டனில் சூறாவளி-பல வீடுகள் சேதம் (PHOTOS)

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா பட்டல்கலை  மேற்பிரிவு தோட்டத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக அந்த தோட்டத்தில் உள்ள 23 தொடர் மற்றும் தனி குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன. கடும் காற்று காரணமாக இந்த தோட்டத்தில் உள்ள 15ம் இலக்க தொடர் குடியிருப்பின் கூரை காற்றினால் அள்ளூண்டு சென்றுள்ளன. இதனால் இந்த குடியிருப்பில் 16 வீடுகளுக்கு மழையால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் கூரைத்தகரங்களும் சேதமடைந்துள்ளன. இதே நேரம் குறித்த பகுதியில் பாரிய கருப்பன் தைலம் மரம் ஒன்று முறிந்து வீடுகளின் மேல் வீழ்ந்ததன் காரணமாக ஒரு வீட்டின் ஒரு பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் ஏனைய இரண்டு வீடுகளின் கூரைத்தகடுகள் சேதமடைந்துள்ளன. இதே பகுதியில் அமைந்துள்ள மற்றுமொரு தொடர்மாடிக் குடியிருப்பில் ஒரு சில வீடுகளின் கூரை சேதமடைந்துள்ளன. குறித்த பகுதியில் சுமார் 50 மேற்பட்ட மரங்கள் மினி சூறாவளி காரணமாக முறிந்து வீழ்ந்துள்ளன. மரங்கள் மின் கம்பிகள் மீது வீழ்ந்து மின் கம்பிகள் மற்றும் வயர்கள் சேதமடைந்ததனால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.. சம்பவ இடத்திற்கு நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் கே.கே. ரவி அவர்கள் இன்றுகாலை சமூகம் தந்து பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்க இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடக செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More »