அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் எரிவாயு தேவையை 15 சதவீதம் குறைப்பதற்கான நடவடிக்கைகள் பலனளிக்காவிட்டால், பொது மக்களுக்கு பங்கீட்டு முறையில் எரிவாயு விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் கடந்த செவ்வாய்க்கிழமை கையொப்பமிட்டன.
உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா எரிவாயு விநியோகத்தைக் குறைத்து வரும் சூழலில் உறுப்பு நாடுகள் இந்த முடிவை எடுத்துள்ளன.