ஒன்ராறியோவில் இன்று 2903 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஒன்ராறியோவில் இன்று 2903 கொரோனா தொற்றாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மாகாணத்தில் கடந்த சில நாட்களை விடவும் தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 10 சதவிகித அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் 41 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
இன்று மாகாண மருத்துவ மனைகளில் 1,701 பேர் அனுமதிக்கப் பட்டுள்ளதுடன், அவர்களில் 400 பேருக்கு மேல் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாகாணத்தில் இன்று பதிவான தொற்றுக்களில் ரொறான்டோவில் 837 பேரும், பீல் பிராந்தியத்தில் 545 பேரும் யோர்க் பிராந்தியத்தில் 249 பேரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar