இரண்டாவது டெஸ்டில் இரட்டை சதத்தை தவறவிட்ட ரூட்

cricket
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் ஆட்ட நிறைவின் போது சுழற்பந்து வீச்சாளர் அம்புல்தெனியவின் பந்து வீச்சில் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறி வருகின்றனர்.

முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 381 ஓட்டங்களை பெற்றது. ஏஞ்சலோ மேத்யூஸ் 110 ஓட்டங்களையும் திக்வெல்ல 92 ஓட்டங்களையும் டில்ருவான் பெரேரா 67 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முதல் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். ஜோ ரூட் இரண்டாவது டெஸ்டில் இரட்டைச் சதத்தை நெருங்கிய வேளையில் ஆட்டமிழந்தார். அவர் 186 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பட்லர் 55 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். மூன்றாவது நாள் ஆட்ட நிறைவின் போது இங்கிலாந்து அணி 339 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இலங்கை பந்து வீச்சு சார்பில் அம்புல்தெனிய 132 ஓட்டங்களைக் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar