3 நாடுகளில் அத்தியாவசிய மற்ற பயண தடை நீடிப்பு

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்காவிற்கும், கனடாவிற்கும் இடையேயான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

எனினும், அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததோடு கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இதனையடுத்து,அமெரிக்கா கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுடனான தனது நில எல்லைகளில் சில கட்டுப்பாடுகளை விதித்தது.

இதன்படி, அமெரிக்காவில் இருந்து கனடா மற்றும் மெக்சிகோ நாடுகளுக்கு செல்லும் எல்லை பகுதிகளில் பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த தடை வருகிற 21ந்தேதியுடன் காலாவதியாகிறது.

இதனை முன்னிட்டு அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது . அதில், கொரோனா பரவலை தடுப்பதற்காக அத்தியாவசியமற்ற பயணங்களுக்கான தடையை வருகிற மார்ச் 21ந்தேதி வரை நீட்டிக்கிறது என தெரிவித்து உள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar