அவுஸ்திரேலியாவில் நாளை முதல் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரசால் இதுவரை 28,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 909 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகவே இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படுகின்றன. அதேசமயம் தடுப்பூசி திட்டத்தை தொடங்குவதற்கும் அவுஸ்திரேலியா அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதோடு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை ஆரம்பமாக உள்ளது.

தடுப்பூசி திட்டம் தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் ஸ்கோட் மோரிசன் அவர்கள் இதற்க்கு முன்னோட்டமாகவும், கொரோனா வைரஸ் தடுப்பூசி தொடர்பாக மக்களிடையே நிலவும் அச்ச உணர்வை நீக்கவும் , நம்பிக்கையூட்டும் வகையிலும் இன்றே தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar