ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு நெருக்கடி நிலை ஏற்படுகின்ற தருணத்தில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகவே கைகொடுக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது.
கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டபோது,
(04:38) இலங்கைக்கு இடையில் பல்லாண்டு நட்புறவு உள்ளது. எமக்கெதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காது என்று நம்புகிறோம். சிலர் இதனை வேறுவிதமாக நாட்டிற்கெதிராக வகையில் சிந்திப்பார்கள் என்றால், அதில் பயனில்லை. இந்த அரசாங்கம் எம்முடன் மிகவும் நட்புறவை வலுப்படுத்தி செயற்படுகின்றது. வெளிநாட்டு ஒன்றுடன் கொடுக்கல் வாங்கல் செய்கின்றபோது சில நெருக்கடிநிலை ஏற்படலாம். ஆனால அந்நாட்டுடன் உறவு முறிந்தது என்ற முடிவுக்கு வரக்கூடாது. கொழும்பு துறைமுக கிழக்கு முனையம் விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சு நடத்தினோம். மேற்கு முனையம் குறித்தும் பேச்சு நடத்தினோம். ஆகவே எமது நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்த தீர்மானத்தையும் இந்தியா எடுக்காது என நம்புகிறோம். கடந்த சில நாட்களாக ஆளுங்கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து ஜெனீவா விவகாரம் குறித்து கலந்துரையாடினோம். இரண்டு வாரங்களில் மூன்று சந்திப்புக்களை நடத்தினோம். கட்சிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் குறித்தும் பேச்சு நடத்தப்பட்டது. ஜெனீவா விவகாரத்தில் என்ன முடிவுகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பது பற்றியே கலந்துரையாடலில் பேசப்பட்டது. இது நீண்டகாலமான பின்பற்றப்பட்டு வருகின்ற பொறிமுறையாகும” என்று தெரிவித்தார்.