ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கொரோனா தொற்றுத் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
அந்த வகையில் அக்கட்சியின் உப தலைவரான வஜிர அபேவர்தன, முன்னாள் எம்.பி திலக் மாரப்பன உள்ளிட்ட பலரும் கடந்த வாரத்தில் தொற்றுக்கான தடுப்பூசியை இரகசியமான முறையில் பெற்றுக் கொண்டிருப்பதாக சிறிகொத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான ஏற்பாட்டினை செய்திருப்பது வஜித அபேவர்தன என்றும் நம்பகரமான வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னும் கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.