இந்திய மீனவர்களை பிடிக்க புதிய பொறியை தயார் செய்யும் இலங்கை

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இந்தியா உட்பட சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பிரதேசத்திற்குள் பிரவேசிக்கும் மீன்பிடி படகுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை கடுமையாக்கவுள்ளதாக இலங்கை மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்ஜன விஜேசேகர தெரிவிக்கின்றார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் மற்றும் உள்நாட்டு மீன்பிடிப் படகுகளை கண்காணிப்பதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து விசேட இயந்திரப் பொருத்துக்களையும் கொள்வனவு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 
“சட்டவிரோதமாக கடல் எல்லையை மீறுகின்ற நடவடிக்கைள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். 2014ஆம் ஆண்டில் ஐரோப்பிய சங்கம் தடையை விதித்தது. பின்னர் அத்தடையை அந்த சங்கம் நீக்கிய போதிலும் பல நிபந்தனைகளை விதித்தது. சட்டங்கள் இருந்தாலும் அதனை அமுல்படுத்துகையில் ஏற்படுகின்ற பலவீன நிலைமை மீன் ஏற்றுமதியில் அது தாக்கம் செலுத்தும் என்ற எச்சரிக்கையையும் அந்த சங்கம் விடுத்துள்ளது. அந்த நிபந்தனைகளில் 97 வீதத்தை நிறைவேற்றியிருக்கின்றோம். உதாரணமாக 2017இல் இலங்கை மீனவர்கள் இந்திய கடலோரத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் நாடு திரும்பிய பின்னர் அவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனை அதில் உள்ளது. இருந்த போதிலு்ம அந்த நிபந்தனை அமுல்படுத்தப்படவில்லை. இதேவேளை இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டரீதியான முறையில் பிரவேசிக்கின்ற மீன்பிடி படகுகள், சட்டவிரோத கடத்தல்கள், குறிப்பாக ஆயுதங்கள், போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட விடயங்களை கொண்டுவருகின்ற மீன்பிடிப்படகுகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த எதிர்பார்க்கின்றோம். இதில் அமுல்படுத்த வேண்டிய சில பரிந்துரைகளை கடற்படை  வழங்கியுள்ளது. மேலும் மீன்பிடிப் படகுகள் பிரவேசம் மற்றும் வெளிச்செல்லல் என்பதை அவதானிக்கக்கூடிய வகையிலான இயந்திரங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு இலவசமாக வழங்க இணங்கியுள்ளது. 4200 இயந்திரங்களை இவ்வாஞ அவுஸ்திரேலியா எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம்” என்றார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar