தீயில் கருகிய பெண்ணின் உடலில் கொரோனா!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

தீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது.

காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில், தீயில் கருகி உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரது உடல் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

காலி, ஹப்புகல – பொரலியதொலவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயது பெண், நீண்டகாலமாக விசேட தேவையுடையவராக இருந்து வந்தவர்.

தனது வீட்டின் அறையில் புகை எழும்புவதை அவதானித்த குறித்த வயோதிபப் பெண், சக்கரநாட்காலியின் உதவியில் அதனை பார்க்கச் சென்றபோது தீயில் கருகியுள்ளார்.

அதன் பின் உடனடியாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்த நிலையில் பி.சி.ஆர் பரிசோதனையும் நடத்தப்பட்டது.

பரிசோதனையின் முடிவு இன்று வெளியாகி அதிர்ச்சியளித்திருக்கிறது.

குறித்த பெண் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar