இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்படுவதற்கு இன்னும் சில மணிநேரங்களே இருக்கின்ற நிலையில், இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ், தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் இலங்கை அணிக்கு இடையிலான போட்டிகள் மார்ச் 4ஆம் திகதி முதல் 14ஆம் திகதிவரை மேற்கிந்திய தீவுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனினும் இன்றைய தினத்தில் இலங்கை அணி வீரர் லஹிருவுக்கு கோவிட் தொற்றும் உறுதிசெய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் அண்மையில் இலங்கை அணியின் வேகப்பந்து தொடர்பில் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராகிய சமிந்த வாஸ் இன்று இராஜினாமா செய்திருக்கின்றார்.
