அமெரிக்காவின் அரிசோனா பகுதியை சேர்ந்தவர் ஹைலிபேஸ் .இவர் ‘டிக்டொக் ’ மூலம் பிரபலம் ஆனவர்.
இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் கருவுற்றுள்ளார். இந்த தகவலை தனது கணவரிடம் ஹைலி கூறுவதற்கு வினோத முறையை பின்பற்றியுள்ளார் .
இதற்க்கு தன் கணவரின் மகிழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை அறிய கருவுற்ற தகவலை வீடியோவாக பதிவு செய்து இதை ‘யூடியூப்’ மற்றும் ‘டிக்டொக் ’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . இது இணையதளத்தில் இப்போது வைரல் ஆகியுள்ளது .
6 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவில் தான் கருவுற்ற செய்தியை தனது கணவர் நிக்கிடம் தெரிவிக்கும் வகையில் ஒரு லொ ட்டரி சீட்டை தனது கணவரிடம் கொடுத்து அதில் என்ன பரிசு கிடைத்து இருக்கிறது என்பதை பார்க்கச் சொல்கிறார்.
கணவரும் அந்த சீட்டை சுரண்டி பார்க்கிறார். அதில் ‘பேபி’ என்று எழுதப்பட்டு இருக்கிறது. அதை பார்த்து குழம்பிய கணவரை பார்த்து
புன்னகை செய்யும் மனைவியை கண்டு உண்மையை புரிந்து கொள்ளும் அவரது கணவர் ஆனந்த குரல் எழுப்பி தனது மனைவியை கட்டித் தழுவி தூக்குகிறார். இந்த வீடியோவை கோடிக்கணக்கானோரும் பார்த்துள்ளனர்.