மைத்திரிக்கு எதிராக விரைவில் வழக்கு?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யுமாறு ஈஸ்டர் தாக்குதல் பற்றி விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை நேற்று இரவு நடந்த அமைச்சரவை சந்திப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் சிங்களப் பிரதிகள் அமைச்சர்களிடம் கையளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேற்படி அறிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் நடக்க முன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்தியா மற்றும் சிங்கப்பூர் சென்றபோது பதில் பாதுகாப்பு அமைச்சரை நியமிக்காமை, தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமை போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ள அதேவேளை, இவை அரசியலமைப்பை மீறுகிற செயற்பாடாகும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி தவிர முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் மீதும் வழக்கு தொடர சட்டமா அதிபருக்கு பூரண அதிகாரம் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar