ஐ.எஸ் தீவிரவாதம் குறித்து இலங்கை மிகுந்த எச்சரிக்கையில்!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஐ.எஸ். அமைப்பு தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கவனத்தில் எடுக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின்போது, ஐ.எஸ். அமைப்பின் செயற்பாடு தொடர்பில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் பிரமுகரால் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தொடர்பில் எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவ்வப்போது இவ்வாறான தகவல்கள் கிடைக்கும். அவை தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.

மேலும் தேவையான தகவல்கள் உரிய வகையில் வெளியிடப்படும். சில தகவல்களை வெளிப்படையாக குறிப்பிடமுடியாது. ஆலோசனையின் பிரகாரம் நடவடிக்கை இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar