ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டம் இன்று ஆரம்பம்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23-ந் திகதி முதல் ஆகஸ்டு 8-ந் திகதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது . இதை முன்னிட்டு ஜப்பானின் வடகிழக்கு நகரமான புகுஷிமாவில் ஒலிம்பிக் தீபத்தின் தொடர் ஓட்ட நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. ஜப்பான் அணி வெற்றி பெற்ற 2011-ஆம் ஆண்டு பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி காலத்தில் அந்த அணிக்கு பயிற்சி அளித்த நோரியோ சசாகி முதல் நபராக தீபத்தை ஏந்தி செல்ல உள்ளார் .

15 பேர் முதல் நாளில் தீபத்துடன் ஓட உள்ளனர். மொத்தம் 121 நாட்கள் ஜப்பான் முழுவதும் உள்ள 47 மாகாணங்களுக்கு இந்த தீபம் பயணிக்கிறது. இதை 10 ஆயிரம் பேர் தொடர் ஓட்டமாக எடுத்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar