ஐபிஎல் தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகல்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

நீண்ட நாட்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முடியாது என்பதினை சுட்டிக்காட்டி அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த சீசனில் விளையாடும்போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணத்தால் ஒன்றிரண்டு போட்டியுடன் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக மேற்கிந்திய அணியின் ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டார்.
இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகள் எதிர் வரும் 9-ந்தேதி ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த வருடத்திற்கான மொத்த ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க முடியாது என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார் .

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar