டுவிட்டர் நிறுவனத்துக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் அமெரிக்க டொலர் அபராதம் விதித்த ரஷ்யா

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவால்னியை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பாரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. சமூக வலைதளங்களில் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பரப்பியதே இந்த போராட்டங்களுக்கு காரணம் என சமூக வலைதளங்கள் மீது ரஷ்யா அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டிய நிலையில், போராட்டத்தில் பங்கேற்பதற்கு சிறுவர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக இடப்பட்ட பதிவுகளை நீக்கத் தவறியதாக குறிப்பிட்டு டுவிட்டர் நிறுவனம் மீது ரஷ்ய அரசு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணையின் போது டுவிட்டர் நிறுவனம் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன ‌.

இந்த வழக்கில் டுவிட்டர் நிறுவனத்துக்கு 1 லட்சத்து 17 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார் .

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar