இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலி

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இந்தோனேசியாவின் பெய்து வரும் கனமழை காரணமாக கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 44 பேர் பலியாகியுள்ளதோடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதில் அப்பகுதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் சரிந்ததோடு ஏராளமான குடியிருப்புவாசிகள் சிக்கியுள்ளனர் . 41 சடலங்களையும், காயமடைந்த 5 பேரையும் மீட்புப் படையினர் மீட்டதாக உள்ளூர் பேரிடர் அமைப்பின் தலைவர் லென்னி ஓலா தெரிவித்துள்ளார் .
மேலும் ஓயாங் பயாங் கிராமத்தில் 40 வீடுகள் அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மூன்று பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார் நீரில் மூழ்கிய வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதோடு அவர்களில் சிலர் வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar