இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சிக்சி புளோரஸ் திமூர் மாவட்டத்தில் 44 பேரும், லெம்பட்டா மாவட்டத்தில் 11 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளமையினால் , மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறியுள்ளனர் . காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.