கடந்த 2 வாரங்களாக எல்.ஜி நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனை மற்றும் தயாரிப்பை நிறுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது சந்தையில் இருந்து வெளியேறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2015- ஆம் ஆண்டு முதலே ஸ்மார்ட் போன் டிவிசனில் கடும் இழப்பை சந்தித்து வந்த எல்.ஜி நிறுவனம் கடந்த ஆண்டு 751 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவுக்கு இழப்பை சந்தித்தது.
இதனைத்தொடர்ந்து ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து முழுவதுமாக வெளியேற வேண்டிய நிலைக்கு எல்.ஜி தள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் அடுத்த ஆண்டு ஜுலை 31 ஆம் தேதி எல்.ஜியின் ஸ்மார்ட் போன் வணிகம் முற்றிலும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.