தடையை மீறி போக்கு வரத்து சேவை யாழில் வழமைக்கு!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

யாழ் நகரவர்த்தகர்  களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றாளர்களின்  எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடந்த 26 ஆம் திகதியிலிருந்து யாழ் நகரின் மத்திய பகுதிகடைகள் மூடப்பட்டு பொதுமக்கள் ஒன்றுகூடலை  மட்டுப் படுத்தும் முகமாக வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு போக்குவரத்து சேவையும் யாழ் பண்ணை பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தன.

இந்த  நிலையில் நாளைய தினம் தொற்று  உறுதி செய்யப்படாதோரின்  கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள தருணத்தில் அரச பேருந்து சேவை யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் செயற்படத் தொடங்கியுள்ளது.

எனினும் பொலிஸார் குறித்த செயற்பாட்டுக்கு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் மக்கள்  நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் முகமாக இன்று வரைபேணப்பட்டு வந்த நடைமுறையினை இலங்கை போக்குவரத்து சபையினர் மீறி விட்டதாகவும் சுகாதாரப் பிரிவினர் இன்று மாலையே தமது முடிவினை அறிவிக்க உள்ள நிலையில் கட்டுப்பாட்டினை மீறி இன்று இபோ ச பேருந்து சேவை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து தமது சேவையை ஆரம்பித்தமைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

னினும் தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் அண்மையில்  திறக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்தில் இடம் பெறுகின்ற நிலையில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவை மாத்திரம் யாழ் நகரப்பகுதியில் சுகாதாரப் பிரிவினரின் அனுமதி பெறப்படாது பலாக்காரமாக இடம்பெறுகின்றமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar