குச்சவெளி பிரதேச சபை முன் மக்கள் ஆர்ப்பாட்டம்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

குச்சவெளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட ஜயானகர் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள சல்லி முனை, தொடுவாய் எனும் கிராமத்தில்கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினால் “பாரம்பரியங்களை நாசம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்” என குறிப்பிட்டு குறித்த பிரதேசத்திற்குள் செல்வதற்கு தடை விதித்து பெயர் பலகை ஒன்று திடீரென போடப்பட்டற்குஎதிர்ப்பு தெரிவித்து குறித்த பகுதி மக்களால்  ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டம் ஆனது இன்று காலை திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியை மறித்து முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறி குறித்த பகுதியில் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தற்போது குறித்த பகுதியில் போதிய நீர் கிடைக்கப் பெறாமையால் மழையை நம்பி மாத்திரமே தாம் விவசாயத்தை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இது இவ்வாறு இருக்க குறித்த பகுதியானது தொல்பொருள் சுவடுகள் இதில் காணப்படும் என குறிப்பிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையானது வேதனை அளிப்பதாகவும் குறித்த பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது அவ்விடத்திற்கு வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளையும் கேட்டுக் கொண்டதோடு குறித்த விவசாயக் காணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும் மக்களுக்கு பொருத்தமான காணிகளை விடுவித்து மக்களது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இடங்களை ஒதுக்கி எஞ்சிய வனப்பகுதிகளை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை தாம் செய்து தருவதாக உறுதிமொழி அளித்தார் அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar