ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகம் முழுவதையும் உலுக்கி வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
அந்த வகையில் அமெரிக்காவில் ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனமும் ஒரே டோஸாக செலுத்தக்கூடிய கொரோனா தடுப்பூசியை தயாரித்து பயன்பாட்டுக்கு விட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் அமெரிக்காவில் 68 லட்சம் பேருக்கு மேல் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதில் அரிதாக சில நபர்களுக்கு ரத்தம் உறைதல் கண்டறியப்பட்டுள்ளதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.

தடுப்பூசி போட்டுக்கொண்டோரில் 6 பேருக்கு ரத்தம் உறைதல் பிரச்சினை கண்டறியப்பட்டு இது தொடர்பாக ஆய்வு தொடங்கியிருப்பதால், இது வரை தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்துமாறு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை அளித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar