செவ்வாய் கிரகத்தில் ஹெலிகப்டர் பறக்கும் நிகழ்வு மீண்டும் ஒத்தி வைப்பு

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

தொழில் நுட்ப கோளாறு காரணமாக செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு 2வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் தற்போது நடத்தப்படும் ஆய்வுகளுக்கு ரோவர் என்ற வாகனம் பயன்படுத்தப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆய்வுப் பணிகளுக்கு இலகுரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வந்ததையடுத்து இறுதியாக கடந்த ஆண்டு இந்தச் சோதனை வெற்றியடைந்தது.

பெர்சிவரன்ஸ் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஹெலிகாப்டரை பறக்க விடும் முயற்சிகள் நாசாவால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தொழில் நுட்ப கோளாறு காரணமாக 2வது முறையாக இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு செவ்வாயில் ஹெலிகாப்டர் பறக்கும் நிகழ்வு நடைபெறும் என்பது பற்றி அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar