போர்ட் சிட்டி குறித்து ஜனாதிபதி இன்று விசேட அறிவிப்பு?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

போர்ட் சிட்டிக்கான ஆணைக்குழு விவகாரம் குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று விசேட அறிவிப்பை வெளியிடவுள்ளார்.

இதற்காக அவர் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை இன்று பிற்பகல்2 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு வரும்படி அழைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி இந்தக்கூட்டம் நேற்று நடக்கவிருந்தது.

இருந்த போதிலும் நேற்று ஈஸ்டர் தாக்குதல் நினைவு நாள் என்பதால் நாடாளுமன்ற அமர்வில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருக்காவிட்டால் பிரச்சினையாகிவிடும் என்பதை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்ததை அடுத்து சந்திப்பு இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar