ஈஸ்டர் தாக்குதல்-182 வழக்குகளை தாக்கல் செய்த பாதிக்கப்பட்டோர்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஈஸ்டர் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் இணைந்து, 182 வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணி ஒருவர் மூன்று வழக்குகளை தாக்கல் செய்திருக்கும் நிலையில், கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தைச் சேர்ந்தவர்கள் 182 வழக்குகளைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி ஷெங்கரில்லா நட்சத்திர விடுதியில் இட்மபெற்ற தற்கொலைத் தாக்குதலில் கடும் காயங்களுடன் உயிர்பிழைத்த சட்டத்தரணி மோதித்த ஏக்கநாயக்க என்பவரால் கடந்த வாரம் 03 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

ஷெங்கரில்லா விடுதி நிர்வாகத்தினர் தனக்கு நட்டஈடு வழங்க வேண்டும் என்றும் அதேபோல, ஆட்சியிலிருந்த ஜனாதிபதி பிரதமர் உட்பட ஆட்சியாளர்களும் தனக்கு நட்டஈட்டை வழங்க வேண்டும் என்றும் கோரியே அவர் உச்சநீதிமன்றில் 03 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையிலேயே உயிர்த்த ஞாயிறன்று தாக்குதலுக்கு உள்ளாகிய தேவாலயங்களில் ஒன்றான நீர்கொழும்பு – கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தைச் சேர்ந்தவர்களால் 182 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம், ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் அதில் காயமடைந்தவர்கள் இணைந்து முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட 06 பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்குகளை நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றனர்.

தங்களுக்கு இரண்டு மில்லியன் தொடக்கம் 25 மில்லியன் ரூபா வரை நட்டஈட்டினை நீதிமன்றம் பெற்றுத்தர வேண்டும் என்றும் வழக்கு தொடுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வழக்கில் பிரதிவாதிகள் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகார் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடிய இடங்கள், நபர்களின் பெயர்கள், நேரம் என போதுமான எச்சரிக்கை தகவல் கிடைத்திருந்தும் அவற்றைத் தடுக்கத்தவறியமையை வழக்கு தொடுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar