மட்டு ஹிஸ்புல்லா கம்பஸ் விரைவில் அரசுடைமை!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

மட்டக்களப்பு ஷர்யா பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குவது பற்றிய விசேட கவனத்தை அரசாங்கம் திருப்பியிருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

எனினும் இதுவரை இறுதிமுடிவை எடுக்கவில்லை என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.

குறித்த பல்கலைக்கழகத்தில் உள்ள சொத்துக்களும, வளங்களும்கூட பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணமுடியாது என்றும் அமைச்சர் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கவிந்த ஜயவர்தனவினால் நேற்று இந்த பெட்டிக்கலோ பல்கலைக்கழகம் பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கேள்விக்கு கல்வி அமைச்சர் இன்று வியாழக்கிழமை பதிலளித்தபோது மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த பல்கலைக்கழகம் பற்றி இரண்டு மாற்று யோசனைகள் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும், குறிப்பிட்ட அவர், கொத்தலாவல மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வளாகமாக அதனை மாற்றுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும்  தெரிவித்தார்.

மேலும் குறித்த பல்கலைக்கழகத்தை அரசாங்கப் பல்கலைக்கழகமாக மாற்றியமைப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar