ஐபிஎல் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

பல வீரர்கள் மற்றும் அணியின் ஊழியர்கள் COVID-19 தொற்றுக்குள்ளானதை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 ஐ தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

நைட் ரைடர்ஸ் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியும், பந்து வீச்சாளர் சந்தீப் வாரியரும் கோவிட் -19 தொற்றுக்குள்ளானதை அடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான போட்டி ரத்துச்செய்யப்பட்டது

ஐபிஎல் நிர்வாக சபை உறுப்பினர்கள் கூறுகையில், அமித் மிஸ்ரா மற்றும் விருத்திமான் சஹா ஆகியோரும் செவ்வாய்க்கிழமை தொற்றுக்குள்ளானமை உறுதிசெய்யப்பட்டது.

வீரர்கள் தொடர்ந்து தொற்றுக்குள்ளாவதால் ஐபில் தொடரின் எஞ்சிய போட்டிகள் பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar