விசாரணை முடியும்வரை ரிஷாட்டிற்கு சபைக்குவர அனுமதியில்லை?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை விசாரணை முடியும்வரை நாடாளுமன்றத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான அட்மிரல் சரத் வீரசேகர சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை நாடாளுமன்றத்திற்கு இன்றும் அழைத்துவராமை பற்றி ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சபையில் கேள்வி எழுப்பினர்.

பொதுமக்களின் பிரதிநிதியாக ரிஷாட் எம்.பியை சபைக்குவர அனுமதிக்க வேண்டும் என்றும் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், மரிக்கார், சமிந்த விஜேசிறி உள்ளிட்டவர்கள் வலியுறுத்தினர்.

எனினும் இதன்போது குறுக்கீடு செய்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இந்தக் கோரிக்கையை சபாநாயகர் நிராகரிக்க வேண்டும் என்று கோரினார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar