சமலுடன் தமிழ் உறுப்பினர்கள் அவசர பேச்சு (PHOTOS)

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

தமிழ் தேசிய கட்சிகளின் பாராளுமன்றஉறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழ்மக்களின் பல்வேறு பிரச்சனைகள்தொடர்பில் அமைச்சர் சமல்ராஜபக்சவைசந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று புதன்கிழமை இச்சந்திப்பு நடந்தது.

இதன் போது பல்வேறு விடயங்களுக்குஅமைச்சர் சாதகமான பதில்களைவழங்கியுள்ளதுடன் அடுத்த கட்டமாக மீண்டும் ஒரு சந்திப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

கல்முனை பிரதேச செயலகத்தைதரமிறக்கும் நடவடிக்கையை நிறுத்திவைக்கவும் இணக்கம் தெரிவித்தார். 

அத்துடன் முல்லை கரைத்துறைப்பற்றில் 08 கிராம சேவையார் பிரிவுகளதும் காணிநிர்வாகத்தினை மகாவலி அதிகார சபைபொறுப்பேற்பதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறும் அமைச்சர் சமல்ராஜபக்ச பணித்துள்ளார்.

இது தொடர்பில் குழு அமைத்து ஆராயும்வரை எந்த நடவடிக்கையும் மேலதிகமாகநடைபெறாதனவும் அவர் கூறியுள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar