இந்திய தொற்றினால் இலங்கையில் எவருக்கும் பாதிப்பா? இன்றுவந்த தகவல்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

இந்தியாவில் பரவிவரும் திரிபடைந்த கொரோனா தொற்று இலங்கையில் பரவாமலிருக்கும்படியான அத்தனை நடவடிக்கைகளையும் எடுப்பதாக தேசிய ஔடதங்கள் பற்றிய இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

 
இந்தியாவில் தற்போது பரவிவரும் தொற்றுடைய எந்த நபரும் இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரித்தானியாவில் பரவுகின்ற தொற்றுக்கு சமானமான தொற்றுக்கே இன்று உலக அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த தொற்றுக்கும் இந்தியாவில் பரவுகின்ற தொற்றுக்கும் இடையே வித்தியாசம் காணப்படுகின்றது. உலகில் அதிகபட்ச நோயாளர்கள் பதிவாகிய பிரித்தானிய தொற்றினால்தான்  அதிகளவானவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று அமைச்சர் கூறினார்.

தெற்காசிய நாடுகளில் முதலாவதாக கோவிட் தடுப்பூசியை மக்களுக்கு வழங்கும் பணியை இலங்கையே ஆரம்பித்ததாக பெருமிதம் வெளியிட்ட அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜதந்திர வழியிலான முயற்சியின் பலனாகவே தடுப்பூசி கிடைக்கப்பெற்றிருந்ததாகவும் கூறினார்.

அண்டைநாடான இந்தியா முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி இலங்கைக்கும் தாக்கத்தை செலுத்தும் என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொற்று பரவாத வகையில் தடுப்பு முயற்சிகளை எடுத்து வருவதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar