மியான்மரில் முன்னாள் எம்.பி.க்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது ராணுவம்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

மியான்மரில் இராணுவ ஆட்சி நடை பெற்று வரும் சூழலில் முந்தைய அரசைச் சார்ந்த்த முன்னாள் எம்.பி.க்கள் அனைவரையும் இராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியதோடு நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது சிறை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை ராணுவம் அறிவித்துள்ளது.
ராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததோடு அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் முந்தைய அரசின் எம்.பி.க்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar