யாழில் மதுக்கடைகளுக்கு சீல் (PHOTOS)

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடாக மதுபான சாலைகளுக்கு முத்திரையிடப்படுவதாக ( சீல்) மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பயணத்தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பயணத்தடை தற்காலிகமாக தளர்த்தப்படும் காலப்பகுதியில் மதுபான சாலைகளைத் திறக்க அனுமதியில்லை என்று அறிவுறுத்தியுள்ளது. 

அதனால் நாடுமுழுவதும் மதுபான சாலைகள் மதுவரித் திணைக்களத்தினரால் பூட்டப்பட்டு முத்திரையிடப்படுகிறது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் சட்டத்துக்குப் புறம்பாக அதிக விலைகளில் மதுபான விற்பனைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar