போர்ட் சிட்டி சட்டம் இன்றுமுதல் அமுல்-மஹிந்த கையெழுத்திட்டார்!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சீனாவின் கோட்டையாக மாறும் என பெரிதும் விமர்சிக்கப்பட்டு இறுதியில் நிறைவேற்றப்பட்ட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று காலை கையொப்பமிட்டுள்ளார். 

கடந்த 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டமூலம் தொடர்பான வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

உச்ச நீதிமன்ற பரிந்துரைக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் காரணமாக சட்டமூலம் சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், துறைமுக ஆணைக்குழுச்  சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையொப்பமிட்டுள்ளார். 

அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச சபைப்படுத்தியதில் இருந்து கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான கடுமையான விமர்சனங்களும், மாற்றும் கருத்துகளும் எதிர்க்கட்சியினராலும், ஆளும் தரப்பினராலும், நிபுணர்கள், கல்விமான்கள், தேரர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வந்தன.

எனினும் நாடாளுமன்றத்தில் கடந்த 20ஆம் திகதி கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றில் இலத்திரனியல் முறைப்படி பெறப்பட்ட வாக்கெடுப்பில் கோளாறு இடம்பெற்றிருந்ததாக விசாரணையும் நடத்தப்பட்டது.

அதன்போது இலத்திரனியல் வாக்குப் பதிவு செய்யும் இயந்திரத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar