வெற்றிமாறன் – ராகவா லாரன்ஸ் கூட்டணியில் “அதிகாரம்”!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

தற்போது சூரி நடிக்கும் படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் தற்போது இதனை அடுத்து அவர் சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தை இயக்க இருக்கிறார்.

இந்த நிலையில் வெற்றிமாறன் மற்றும் ராகவா லாரன்ஸ் இணையும் படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வந்துள்ளது.

பிரபல தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் வெற்றிமாறன் கதையில் உருவாகும் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ’அதிகாரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கவுள்ளார் . இது குறித்த வீடியோ பைவ் ஸ்டார் கதிரேசன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar