அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக, நயன்தாரா ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா. தென்னிந்திய மொழிகளில், அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார்.
இவர் இப்போது ’நெற்றிக்கண்’ என்றப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து ரஜினிகாந்தின் ’அண்ணாத்த’ படத்தில் நடித்திருக்கும் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா, பாலிவுட்டில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த திரைப்படத்தை அட்லீ இயக்குக்கிறார். அவரது இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் முதல் படத்தில் ஹீரோயினாக, நடிகை நயன்தாரா நடிக்க இருப் பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ’ராஜா ராணி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ, விஜய் நடிப்பில், தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

இந்தப் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக, நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar