இந்தியன்- 2 வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் இந்தியன் 2.
படப்பிடிப்புத் தளத்தில் நிகழ்ந்த விபத்து, அத்துடன் கொரோனா ஊரடங்கு காரணமாக, பல மாதங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷங்கர் வேறு சில படங்களில் கவனம் செலுத்தி வருவதால், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கிகை விசாரித்த நீதிபதி சதிஷ்குமார் இந்த இடைக்கால உத்தரவவைப் பிறப்பித்தார்.

மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி நீதிபதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar