4-வது T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

மேற்கிந்திய தீவுகள் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4-வது 20 ஓவர் போட்டி கிரெனடா, செய்ன்ட் ஜோர்ஜ் மைதானத்தில் நடாய்பெற்றது.

முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ஓட்டங்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சிமன்ஸ் 47 ஓட்டங்களுடன் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் விரைவிலேயே பார்வையாளர் மண்டபத்திற்குத் திரும்பினர்.

கேப்டன் பொலார்ட் அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 51 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 168 ஓட்டங்களை இலக்காக கொண்டு தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் மாத்திரமே எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் டி கொக் மட்டும் இறுதி வரை போராடினார். ஆனாலும் அவர் 60 ஓட்டங்களுடன் வெளியேறவேண்டியேற்பட்டது. இதனால் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவுகள் 2-2 என்ற விகிதத்தில் தொடரை சமன் செய்துள்ளது. ஆட்ட நாயகன் விருது பொலார்டுக்கு வழங்கப்பட்டது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி இன்று (03) நடைபெறுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar