அர்ஜுன் மகேந்திரன் இன்றி,பிணைமுறி மோசடி வழக்கை நடத்த நீதிமன்றம் அனுமதி!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்றி, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

2016 மார்ச் 29 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறை ஏலத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த மோசடி வழக்கில், அக்காலப்பகுதியில் மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த அர்ஜுன் மகேந்திரன் மற்றும் அவரது மருமகனான பர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில், அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar