GTA மற்றும் தெற்கு ஒண்டாரியோ பகுதிகளுக்கு காற்று மாசு எச்சரிக்கை!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

கிரேட்டர் டொராண்டோ பகுதி மற்றும் தெற்கு ஒன்ராறியோவின் எஞ்சிய பகுதிகள் தற்போது சுற்றுச்சூழல் கனடாவிலிருந்து ஒரு சிறப்பு காற்று தர அறிக்கையின் கீழ் உள்ளன, ஏனெனில் வடமேற்கு ஒன்ராறியோவில் காட்டுத் தீயில் இருந்து புகை தெற்கே வீசுகிறது.

“வடமேற்கு ஒன்ராறியோவில் தீவிரமான காட்டுத் தீயில் இருந்து வரும் புகை தெற்கு ஒன்ராறியோவை நோக்கி நகர்ந்துள்ளது” என்று சுற்றுச்சூழல் கனடா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் அதில் “பல பகுதிகளில் உயர்ந்த அளவில் துகள்கள் காணப்படுவதுடன் மங்கலான வளிமண்டல நிலைமைகழும் பதிவாகியுள்ளன. மேலும் புகை தரை மட்டத்திற்கு இறங்கினால் வீதிகளில் தெளிவற்ற நிலை காணப்படும் எனவும் காற்றின் தரம் மோசமடைவது சாத்தியமாகும்.” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar