கொரோனா 4ம் அலை என்பது ஆதாரமற்றது – சுகாதார அமைச்சு

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

நேற்று(ஆடி 20) இலங்கை மருத்துவ சங்கம், நாடு கொவிற்-19 நான்காவது அலையின் முதல் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும், பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இல்லை எனத் தெரிவித்துள்ளபோதிலும் நாடு நான்காவது அலைக்குச் செல்கிறது என்று கூறுவதற்கு எந்த அறிகுறியும் இதுவரை இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் மருத்துவர் ரஞ்ஜித் பட்டுவந்துவ, தற்போது நாடு மூன்றாவது அலைகளின் இறுதி கட்டத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.
“தற்போதைய சூழ்நிலையைப் பார்த்து அதை கருத்திற்கொள்வது வெவ்வேறு கண்ணோட்டங்களாக இருக்கலாம். இருப்பினும், தொற்றுநோயியல் பிரிவிலுள்ள தரவு மற்றும் புள்ளிவிவரங்களை அனைவரும்
பின்பற்ற வேண்டும், ”என கூறியுள்ள அவர் நோய் விபர அட்டவணையின்படி, தற்போது கொவிற் -19 நோய்த் தொற்று கீழ் நோக்கி போகும் போக்கு காணப்படுவதாகவும், எனவே, நான்காவது அலையின் உடனடி அச்சுறுத்தல் இருப்பதாக அவர்கள் முடிவுக்கு வரமுடியாது என்றும் கூறிய அவர் “இருப்பினும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட சூழ்நிலையில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதிலே இது தங்கியுள்ளது” என்றார்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar