ஆலயத்தினுள் சென்று சுவாமி தூக்கிய இராணுவம்

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டதுடன் சுவாமியைத் தூக்கியுள்ளனர். ஆலயத்தின் வருடாந்தா அலங்கார உற்சவம் நடைபெற்று இன்று (ஆடி 22) வியாழக்கிழமை தேர்த் திருவிழா நடைபெற்றது.

சமகாலச் சூழல் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள் வீதி உலா வந்தார். அதன் போது பிள்ளையாரை இராணுவத்தினர் தண்டில் காவி உள் வீதி உலா வந்தனர்.

கொரோனா தொற்று காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த அடியார்கள் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் சுவாமியத் தூக்கினர். இந்தச் செயல் அடியவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை கவனிப்பிற்குரியது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar