மாநாடு பட Supper அப்டேட்!

maanadu simbu
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

சிம்பு நடிப்பில் அடுத்ததாக அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் மாநாடு. சமீபத்தில் ஒசூரில் மாநாடு படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிக்கப்பட்டது. முன்னதாக இந்த படத்தின் பாடல் மற்றும் டீஸர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இந்நிலையில், விரைவில் மாநாடு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் எனவும் தெரிகிறது. அதைத் தொடர்ந்து தற்போது டப்பிங் மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிம்பு ரசிகர்கள் மாநாடு படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சியை சமூக வளைதளத்தில் அண்ணா அண்ணா என புகழ்ந்து தள்ளி விட்டனர். ஒரு தயாரிப்பாளரை ரசிகர்கள் இதுவரை இந்த அளவுக்கு கொண்டாடியதில்லை.

இதற்கிடையில் ரசிகர்கள், மாநாடு படத்தின் ரிலீஸ் எப்போது என்பதையும் கேட்கத் தவறவில்லை. தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வந்த ரசிகர்களில் ஒருவர், அண்ணா மாநாடு ரிலீஸ் எப்போது? என கேட்டுள்ளார்.

அதற்கு சுரேஷ் காமாட்சி தியேட்டர்கள் திறந்ததும் மாநாடு பட அப்டேட் ஒவ்வொன்றாக வெளிவரும் என தெரிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் மாநாடு படக்குழுவினர் தியேட்டரில்தான் படத்தை வெளியிட வேண்டும் என முடிவில் இருக்கின்றனர் என்பது தெளிவாக தெரிகிறது.

சிம்பு தற்போது மாநாடு படத்தை முடித்துவிட்டு சத்தமில்லாமல் கொரானா குமார் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் நீண்ட வருடங்களுக்கு பிறகு கௌதம் மேனனுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற படத்திலும் பணியாற்றி வருகிறார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar