முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம்வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவருகிறார். அடுத்த ஆண்டு வரை கால்ஷீட் ஃபுல் என்கிறார்கள் நெருங்கிய வட்டாரங்கள். தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா, சமந்தா இருவரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்கு இடையே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசி உள்ளார், விஜய் சேதுபதி.

அப்போது, முன்பெல்லாம் புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு ஒரு நாளைக்கு கட்டணமாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அது ரூ.28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

vijay sethupathi

இதுபற்றி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் ரங்கசாமி உறுதி அளித்ததாக சொல்லப்படுகிறது. இதற்கு முன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருந்த ‘நானும் ரவுடி தான்’ படமும் புதுச்சேரியில் படமாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar