ஆக்சன் கிங் தொகுத்து வழங்கும் அசத்தல் நிகழ்ச்சி சூப்பர் அப்டேட் !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

ஜி தமிழ் தொலைக்காட்சியில் வரும் செப்டம்பர் 12 முதல் இரவு 9:30 க்கு தமிழில் ஔிபரப்பாக உள்ளது சர்வைவர் (Survivor) நிகழ்ச்சி.


சமீபத்தில் வெளியாகியுள்ளன நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுப்பாளராக களமிறங்கும் இந்த ஷோவில் 16 போட்டியாளர்கள் பங்கெடுப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

மேலும் அதில் சில போட்டியாளர்களின் பெயர்களும் வெளியாகியுள்ளன. அந்த வனபபகுதிக்குள் ஒரு மனிதன் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதும் அதற்காக போராடுவதும் என இந்த போட்டியின் நடைமுறை இருக்கும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் இதனை வழிநடத்துவார். அதற்கு ஏற்றாற் போல அவர்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும்.

வெளியாகியுள்ள போட்டியாளர்களின் விபரம் இதோ

விக்ராந்த் – சில படங்களில் ஹீரோவாகவும் உதயநிதி நடிப்பில் வெளிவந்த கெத்து படத்தில் வில்லனாகவும் நடித்திருப்பார். பெருமளவிலான படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த விக்ராந்திற்கு அவ்வப்போது சில படங்கள் வெளிவந்தன.

பெசன்ட் ரவி – சில படங்களில் வில்லனாகவும் பல படங்களில் வில்லன்களின் அடியாளாகவும் நடித்திருக்கும் பெசன்ட் ரவி.

காயத்ரி ரெட்டி – பிகில் படத்தில் நடித்திருக்கும் மாடல் அழகி காயத்ரி ரெட்டி.

உமாபதி – நடிகரும் இயக்குனருமான தம்பி ராமையாவின் மகனும் சில படங்களின் நாயகருமான உமாபதி ராமையா.

சிருஷ்டி டங்கே – சில படங்களில் நாயகியாக நடித்திருந்தவர் ஒரு கட்டத்தில் திரையில் தோன்றாமலே போய்விட்டார். கண்ணக்குழி சிரிப்பிற்கு இவர் நடித்த புத்தம் புது காலை பாடலின் ரீமேக் ஒரு சான்று.

விஜயலட்சுமி – சென்னை 28 உட்பட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை விஜயலட்சுமி காலம் வெகுதூரம் கைதராமல் போகவே அமைதிகாத்து வருகிறார்.

வி.ஜே.பார்வதி – பல்வேறு சர்ச்சைகளை கிளப்பும் கேள்விகளை தனியொரு பெண்ணாக நின்று அசால்ட்டாக கேள்விகளை தொகுத்து வருபவர் வி.ஜே.பார்வதி. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை இவரின் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம்.

நந்தா – நடிகர் நந்தா சில படங்களில் மெயின் ரோலிலும் சில படங்களில் துணை ரோலிலும் வந்து சென்றவர். கலந்து கொள்ளும் போட்டியாளர்களில் எட்டு பேரின் பெயர்களே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய போட்டியாளர்களின் பெயர்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar