தல அஜித்தின் மைத்துனர் “ருத்ர தாண்டவம்”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி படங்களின் வாயிலாக ஓரளவு அறியப்பட்ட இயக்குனர் ஜி.மோகன். சமீபத்தில் வெளியான அவரின் மூன்றாவது படத்திற்கு இயக்குனர் ருத்ர தாண்டவம் என பெயரிட்டிருந்தார்.

இந்த தலைப்பு தொடர்பாகவே பல்வேறு YouTube சேனல்களள் பலவும் வீடியோக்களை பதிவேற்றி வந்தன. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக உள்ளது. இப்படத்தில் மூன்றாவது முறையாக இயக்குனர் ஜி.மோகனுடன் இணைகிறார் நடிகர் ரிச்சர்ட்.

தமிழ் திரையுலகே கொண்டாடும் தல அஜித்தின் மைத்துனரும் ஷாலினியின் சகோதரருமானவர் தான் நடிகர் ரிச்சர்டம் அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவருக்கு இளமைக்காலத்தில் வந்த படங்கள் எல்லாம் தோல்வியையே சந்தித்தன.

ஜி.மோகனுடன் இணைந்த பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் திரௌபதி இவருக்கு ஓரளவேனும் அடையளத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

முன்னதாக ஜி.மோகனின் நண்பர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் “நாளைக்கு இன்நேரம் “ருத்ர தாண்டவம்”டிரைலர் வந்திடும் மொத்த போராளீஸும் ஆக்டிவ் மோட்” என கமாண்ட் செய்திருந்தார். இந்த கமாண்டுக்கு இயக்குனர் ஜி.மோகன் ஸ்மைல் ஈமோஜியை பகிர்ந்திருந்தார்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar