ராட்சசி இயக்குனரின் புதிய படத்தில் “அருள்நிதி”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

தமிழ் சினிமாவில் சத்தமில்லாமல் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் தான் நடிகர் அருள்நிதி.வித்தியாசமான மற்றும் மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் அருள்நிதி மிகவும் கைதேர்ந்தவர். இதுவரை தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அனைத்து படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளன.

அந்த வரிசையில் அருள்நிதி நடிப்பில் வெளியான வம்சம், டிமான்டி காலனி, மௌனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், ஆறாது சினம், களத்தில் சந்திப்போம் உள்ளிட்ட அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல் ஒவ்வொரு படமும் மாறுபட்ட கதை களங்களை கொண்டிருந்தன.

தற்போது நடிகர் அருள்நிதி பிரபல யூடியூபர் எருமசாணி விஜய் இயக்கத்தில் டி-பிளாக் என்ற படத்திலும், அறிமுக இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் தேஜாவு என்ற படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் டைரி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். டைரி படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் ராட்சசி படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளாராம். ராட்சசி படத்தின் வெற்றியை தொடர்ந்து கெளதம் தனது அடுத்த படத்திற்காக பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது அருள்நிதி இப்படத்தின் நாயகனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அருள்நிதியுடன் நடிக்க உள்ள நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தை தயாரிக்க உள்ளதாம். விரைவில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெளதம் ராஜ் மற்றும் ஜோதிகா கூட்டணியில் வெளியான ராட்சசி படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்வ வரவேற்பு கிடைத்தது. எனவே இந்த படமும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp

Related News

o'Bazaar